17 March, 2007


விழித்திடாதே மனமே

எழுதுகோலை எடுக்கும் போதெல்லாம்
எண்ணங்களின் அலைகள்
எண்ணியதெல்லாம் சொல்ல
எண்ணம் தான் விடுமோ???
மனதின் அலைகளைமறைப்பது எங்கணம்??
மனதே நீ ஒரு தாழ்பாள் தா
மனதை மனதால் பூட்டி வைக்கிறேன்
மனிதம் மறந்த நெஞ்சங்களுக்கு
மனதின் ஓசை எதற்கு ??
மனதே நான் உனை வெல்ல
கொஞ்சம் மனது தான் வையேன் மெல்ல.
மனது கிடந்து தவிக்கிறது
இந்த மனதை வெற்றி கொள்ள
மனதே நான் உனை வெல்வேன்
மனித நேயம் கொன்று அல்ல
மனச்சங்கிலியால் பூட்டி
மனச்சிறையில் அடைத்து
மனதே உனை மறைத்து விட்டேன்
மறந்தும் நீ விழித்திடாதே !!!

7 comments:

மே. இசக்கிமுத்து said...

"இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்.. " பாடல் நினைவுக்கு வர செய்து விட்டீர்கள்!!! அருமை!!

பத்மா said...

nanri isaki.meendum varuga.

Senthil said...

Hi paddy..
I am vijaya senthil
Nice blogs..keep rocking..

வவ்வால் said...

vanakkam ush!

valaippathivu kalaththil neengalum irangivitteerkala ini ennoda aattam kali! kavithai palirnu iruku , niraya ezhuthunga nan valaipathivu pakam varuvathu tharsamayam saathiyam illai viraivil varukiren.

(unga msg inniku than parthen kaala thaamathathirku varunthukiren)

priya said...

Me arumaiyaa irruku..really wonderful..

desigan said...

விழித்திடாதே மனமே...miga arumai...keep rocking....

Anonymous said...

i love this.