02 March, 2007


அம்மா
எங்கெல்லாம் தேடுவேன்??
உனை எப்படியெல்லாம் தேடுவேன்??
என்று தான் நிறுத்துவேன்
காண்பதில்லெல்லாம் உனை தேடுவதை???
எனக்கே எனக்கென
நாளெல்லாம் மலரும் செம்பருத்தியா?
பள்ளிக்கு செல்லும் போது
கூடப் பறக்கும் பட்டாம்பூச்சியா??
மதியம் என் உணவை
பகிற வரும் கருங்காக்கையா??
காலாற நடக்கும் சமயம்
காலையே தொடரும் நாய் குட்டியா?
ஜன்னலை திறக்கும் போதெல்லாம்
எட்டிப் பார்க்கும் சிட்டுக்குருவியா??
மேட்டுவளை நோக்கி சிந்தித்திருக்கும் சமயம்
சகுன சத்தமிடும் பல்லிக்கூட்டத்திலா??
அம்மா!!என கால் அடி பட்டு கதறுங்கால்
ஐயோ!!! என பதறும் மூதாட்டியா??
அன்பைக் காணும் போதெல்லாம்
அம்மா உனைக் காண்கிறேன்!!!
என் மகளாய் பிறக்க
இப் பிறவியில் இயலாதெனில்
அடுத்த வீட்டுக்குழந்தையாகவாவது வா
என் மடியில் அமர்ந்து கொஞ்ச!!!!!!

6 comments:

Prabu said...

Sooo Nice Kavithai..... superb...lovely.....

Valarga ungal Pulamai...
Prabu

பத்மா said...

nanri prabhu.

Unknown said...

பயனுள்ள நிறைய விஷயங்கள் எழுதரிங்க பத்மா. தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Unknown said...

Amma ellarukkum romba romba special..

Indha kavidhai padicha udane ellarukkum kandippa amma ninaivu varum.

Pls post more on all topics...

Unknown said...

Romba romba manadhai negila vaitha kavidhai...

enna amma va pathi eppo padichalum ullukkulla appdiye oru anandamana feeling varum...

VERY NICE ONE...

Unknown said...

Romba Romba arumaiya irukku Ammavai patriya kavithai.. Superb pa.. Keep itup..