15 March, 2007

எறும்புகளைக் கொல்வதில்லை


வரிசை மாறாமல் போவதில்
ஒழுக்கதின் உதாரணம்
ஆகையால் எறும்புகளைக் கொல்வதில்லை

ஒன்றிறக்க மற்றவை தவிப்பதில்
அன்புக்குதாரணம்
எறும்புகளைக் கொல்வதில்லை
பலமடங்கு எடை சுமப்பதில்
பலத்தின் உதாரணம்
எறும்புகளைக் கொல்வதில்
ஓய்வின்றி உழைப்பதில்
சுறுசுறுப்பின் அடையாளம்
எறும்புகளைக் கொல்வதில்லை

மழைக்காக சேமிப்பதில்
முன்னெச்சரிக்கையின் சின்னம்
எறும்புகளைக் கொல்வதில்லை

முன்னேறத் துடிப்பதில்
முயற்சியின் இலக்கணம்
ஆக எறும்புகளைக் கொல்வதிலை

இத்தனை இருந்த போதும்
காதல் வாழ்வு உள்ளதா ??
அது அறிய நிச்சயம்
எறும்புகளை கொல்லமாட்டேன்

9 comments:

subbu said...

Romba arumai ME..........Unghal Anbu Thozhan

subbu said...

Excellent mother..........Erumbu nammakku sollum paadam indha kavidhayil arpudamma vandhu irukku

பத்மா said...

thanx subbu.chinna kanni muyarchi valaranum.ungal aasigaludan.

Unknown said...

அருமை பத்மா! நானும் உங்களை மாதிரி தான், எறும்புகளை கொல்வதில்லை. என்றைக்காவது ஒரு நாள் எனக்கான கரும்பை கண்டுபிடிச்சு தரும்......அப்படின்னு ஒரு நப்பாசைதான். நிரைய தகவல்கள் திரட்டி எழுதி இருக்கிங்க. வாழ்த்துக்கள். தங்கள் பணி தொடரட்டும்.

பத்மா said...

thenu,
nanri nanri .ungal blog pakka aavalai ullen.

Roy Cherian Cherukarayil said...

A good way to bring out qualities in an ant....I have killed a lot of them....but certainly...they are role models...

Sensoft2000 said...

final touching nice

Anonymous said...

rasikka seitha intha kavithai sinthikkavum seithathu! nanum ini yerumbugalai kolvathillai......

Anonymous said...

very nice webpage with nice kavithais