விழித்திடாதே மனமே
எழுதுகோலை எடுக்கும் போதெல்லாம்
எண்ணங்களின் அலைகள்
எண்ணியதெல்லாம் சொல்ல
எண்ணம் தான் விடுமோ???
மனதின் அலைகளைமறைப்பது எங்கணம்??
மனதே நீ ஒரு தாழ்பாள் தா
மனதை மனதால் பூட்டி வைக்கிறேன்
மனிதம் மறந்த நெஞ்சங்களுக்கு
மனதின் ஓசை எதற்கு ??
மனதே நான் உனை வெல்ல
கொஞ்சம் மனது தான் வையேன் மெல்ல.
மனது கிடந்து தவிக்கிறது
இந்த மனதை வெற்றி கொள்ள
மனதே நான் உனை வெல்வேன்
மனித நேயம் கொன்று அல்ல
மனச்சங்கிலியால் பூட்டி
மனச்சிறையில் அடைத்து
மனதே உனை மறைத்து விட்டேன்
மறந்தும் நீ விழித்திடாதே !!!